/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரீமியர் லீக் கூடைப்பந்து கல்வி பள்ளி சாம்பியன்
/
பிரீமியர் லீக் கூடைப்பந்து கல்வி பள்ளி சாம்பியன்
ADDED : பிப் 10, 2025 05:02 AM

சோழவந்தான்: மதுரையில், மாவட்ட கூடைபந்து சங்கம் சார்பில் மதுரை பிரீமியர் லீக் போட்டிகள் நடந்தது.
இதில் 26 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. லீக், கால் மற்றும் அரை இறுதி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி அணி இறுதிப் போட்டியில் சேதுபதி பள்ளியை 72-51 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. கல்வி பள்ளி அணிக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு,கோப்பையை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் ராஜ் சத்யன், மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் வசந்தவேல், பொருளாளர் சந்தானகிருஷ்ணன், துணைத் தலைவர்கள், கூட்டு செயலாளர்கள் வழங்கினர்.
வெற்றிபெற்ற மாணவர்கள், பயிற்சியாளர் ஜெகதீஸ்வரனை கல்வி பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.