/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 26, 2024 06:53 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார்.
துணை பொது செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். பொது செயலாளர் மயில் செயற்குழு முடிவுகளை விளக்கினார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் செப்., 10 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், செப்., 29, 30, அக்., 1ல் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டமும் நடப்பதில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது.
எஸ்.டி.எப்.ஐ., பொதுக்குழு உறுப்பினர் டேவிட்ராஜன் நன்றி கூறினார்.