/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை அறிக்கை முடக்கப்படுகிறதா நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் என பேராசிரியர்கள் கேள்வி
/
மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை அறிக்கை முடக்கப்படுகிறதா நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் என பேராசிரியர்கள் கேள்வி
மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை அறிக்கை முடக்கப்படுகிறதா நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் என பேராசிரியர்கள் கேள்வி
மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை அறிக்கை முடக்கப்படுகிறதா நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் என பேராசிரியர்கள் கேள்வி
ADDED : மார் 04, 2025 09:00 PM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு குறித்து பேராசிரியர் குழு விசாரணை நடத்தி 2 வாரங்களுக்கு முன் விரிவான அறிக்கை சமர்ப்பித்தும், தொடர் நடவடிக்கைகள் மறைமுகமாக முடக்கப்படுவதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இப்பல்கலையில் பிஎச்.டி., படிப்புகளுக்கான நுழைத் தேர்வு 2024, செப்., 22ல் நடந்தது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களிடம் அப்பிரிவு அலுவலர்கள் சிலர் ரூ.பல லட்சம் பணம் பெற்று முறைகேடு செய்ததாக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆதாரங்களுடன் அரசு செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கருக்கு புகார் அனுப்பினர். இதுகுறித்து விசாரிக்க உயர்கல்வித்துறையும் உத்தரவிட்டது.
இதன்படி, இம்முறைகேட்டை விசாரிக்க 2024 டிச.,27ல் இப்பல்கலை பயோடெக்னாலஜி புலத் தலைவர் கணேசன் தலைமையில் பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணையை முடக்கும் வகையில் பல்கலை அதிகாரிகள், அலுவலர்கள் சிலர் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குழு விசாரணையில் தடை ஏற்பட்டது. அதையும் தாண்டி இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து விசாரணை நடத்திய குழு, அதன் விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு முன் பதிவாளரிடம் சமர்ப்பித்தது. ஆனால் அதன் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மறைமுகமாக கிடப்பில் போடப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்கலை அதிகாரிகள் பலருக்கு மறைமுக தொடர்பு உள்ளது. இதனால் தான் விசாரணை குழுவை முடக்கும் வகையில் பலர் 'அரசியல்' செய்து வருகின்றனர். இத்தகவல் அறிந்த உயர்கல்வி அதிகாரிகள் விசாரணை குழுவை முடுக்கி விட்டனர். இதன் பின்னணியில் தான் விசாரணையை அக்குழு விரைவுபடுத்தி முடித்துள்ளது. ஆனால் 2 வாரங்களுக்கு முன் அறிக்கை தாக்கல் செய்ததும் அதன் தொடர் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் 2 வாரங்களாக அந்த அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
விசாரணை குழு தரப்பில், 2 வாரங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது. அதிகாரிகள் உத்தரவின்பேரில் பலரிடம் விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. தொடர்புடையவர்கள் விவரம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழு பணி அத்துடன் முடிந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டது.
பல்கலை அதிகாரிகள் கூறுகையில், பேராசிரியர்கள் குழு அறிக்கை கன்வீனர் கவனத்திற்கு கொண்டு சென்று சிண்டிகேட் கூட்டத்தில் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இவ்விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.