ADDED : ஜூன் 16, 2024 05:09 AM
மதுரை: மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் இன்டர்னல் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் செல் (ஐ.க்யூ.ஏ.சி.,) சார்பில் ஆசிரியர் துாண்டல் திட்ட நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராணி வரவேற்றார். முதல்வர் கவிதா பேசினார்.
எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை, ஆராய்ச்சி அடித்தள திட்ட இயக்குநர் ஜனார்தனபாபு, மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், சுயபாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துதல் குறித்துப் பேசினார்.
குடும்பத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை சகிப்புத்தன்மையுடன் எவ்வாறு கையாள்வது, பணியிடங்களில் மன அழுத்தத்திற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் குறித்து பேசினார்.
மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் கணினி துறைத் தலைவர் ஆறுமுகம், கற்பித்தலில் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய நுட்பங்கள், அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார்.ஆங்கிலத் துறைத் தலைவர் தமிழரசி நன்றி கூறினார்.