/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரசாரத்தால் பள்ளி தேர்வு பாதிப்பு
/
பிரசாரத்தால் பள்ளி தேர்வு பாதிப்பு
ADDED : ஏப் 05, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் நகரில் 6 அரசு, மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அனைத்து வகுப்புகளுக்கும் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை அடுத்தடுத்து தேர்வு நடக்கிறது. ஏப்.,12 வரை இத்தேர்வு நடக்கிறது.
இந்நிலையில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியினர் ஆட்டோ, மினி சரக்கு வேனில் ஸ்பீக்கர்களை கட்டி தொடர்ந்து இடைவிடாது அதிக சத்தத்துடன் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி தேர்வு எழுத முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தேர்வு நேரத்தில் பள்ளி பகுதிகளில் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

