ADDED : ஜூலை 14, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: வன்னிவேலம்பட்டியில் வசித்து வரும் 26 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்கள் கூறுகையில், ‘‘50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்கக்கோரி பலமுறை தாலுகா அலுவலகத்தில் முறையிட்டும் இதுவரை வழங்கவில்லை’’ என்றனர். மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைப்பதாக தாசில்தார் முகிபாலன் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
