ADDED : ஜூலை 12, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு எஸ்.டி.,காட்டுநாயக்கர் பழங்குடியினர் என்ற பெயரில்கடந்தாண்டு வரை ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஓராண்டாக வழங்கவில்லை. இதனால் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோர் சத்தியமூர்த்தி நகர் மந்தையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

