/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூடுதல் மின்னணு இயந்திரங்கள் ஏற்பாடு
/
கூடுதல் மின்னணு இயந்திரங்கள் ஏற்பாடு
ADDED : ஏப் 03, 2024 05:34 AM
மதுரை : மதுரை தொகுதியில் பயன்படுத்த கூடுதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
மதுரை லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுகளிலும் 2753 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு பயன்படுத்த தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், அதற்கான கன்ட்ரோல் யூனிட், ஓட்டளித்ததை சீட்டில் பதிவு செய்து தெரிவிக்கும் வி.வி.பேட் இயந்திரம் ஆகியவை சில நாட்களுக்கு முன் சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது.
மதுரை தொகுதியில் 21 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள், ஒரு 'நோட்டா'வுக்கான பட்டன் ஆகியவையே இருக்கும்.
கூடுதலாக வேட்பாளர் போட்டியிடுவதால் தற்போது கூடுதலாக ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டும் இணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை மட்டும் அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் அனுப்பும் பணி நேற்று நடந்தது. 2753 இயந்திரங்களும், கூடுதலாக 20 சதவீத எண்ணிக்கையுடன் அனுப்பப்பட்டன.

