
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் மருதுபாண்டியர் தெரு ஆனந்த விநாயகர் கோயிலில் வெப்பம் தணியவும், மழை வேண்டியும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
ஆனந்த விநாயகர் மகளிர் சபா நிர்வாகிகள், பொதுமக்கள் திருப்பாவை பாசுரம் 108 முறை பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மஹா வராஹி வழிபாட்டு மன்றத்தில் மழை வேண்டியும், அனைத்து உயிரினங்களும் நலம் பெற வேண்டியும் சிறப்பு யாகம், பூஜை நடந்தது.