ADDED : ஜூலை 18, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டத்தில் 2026-–27ல் 25 விவசாயிகள், 7 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.4.80 லட்சம் அரசு மானியத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் மின்மோட்டார் பம்புசெட்கள் வழங்கப்படும்.
விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், விவசாய அடையாள எண் , மின் இணைப்பு சான்று நகல், வங்கி பாஸ் புக், ஜாதி சான்று நகலுடன் உதவி செயற்பொறியாளர்(வே.பொ.) அலுவலகம், 60 டி.பி.கே.ரோடு, மதுரை-625011 (அலைபேசி 77088 84126) , உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வணிக வளாகம், உசிலம்பட்டி (அலைபேசி 94431 48364) ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தார்.
