ADDED : ஜூலை 18, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
அழகர்கோவில்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேலுார் குறுவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளை அழகர்கோவில் சுந்தரராஜா மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது.
மேலுார் அஸ்வின் பள்ளியில் நடந்த 11, 14, 17, 19 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் பிரிவுக்கான செஸ் விளையாட்டு போட்டிகளில் மேலுார் குறுவட்டத்தின் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமையில், மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர் வினோத் மேற்பார்வையில் நடந்த இப்போட்டிகளை, மேலுார் குறுவட்ட உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் நடத்தினர்.
