/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாங்கியதோ ரூ.100: நிரப்பியதோ ரூ.60க்கு: பெட்ரோல் பங்க்கில் நுாதன மோசடியா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
/
வாங்கியதோ ரூ.100: நிரப்பியதோ ரூ.60க்கு: பெட்ரோல் பங்க்கில் நுாதன மோசடியா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
வாங்கியதோ ரூ.100: நிரப்பியதோ ரூ.60க்கு: பெட்ரோல் பங்க்கில் நுாதன மோசடியா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
வாங்கியதோ ரூ.100: நிரப்பியதோ ரூ.60க்கு: பெட்ரோல் பங்க்கில் நுாதன மோசடியா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ADDED : மே 09, 2024 05:34 AM

மதுரை: மதுரை பெட்ரோல் பங்க் ஒன்றில் ரூ.100க்கு ரூ.60க்கான அளவே பெட்ரோல் நிரப்பியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
கோரிப்பாளையம் - பாலம் ஸ்டேஷன் ரோட்டில், அம்மன் ஏஜென்சிஸின் பாரத் பெட்ரோல் பங்க்கில் மே 6ம் தேதி டூவீலருக்கு இருவர் தலா ரூ.100க்கு பெட்ரோல் நிரப்பினர். ரீடிங்கில் ரூ.60 என காண்பித்தது. பங்க் ஊழியரிடம் கேட்டதற்கு, 'மிஷின் பழுது' என்றார். சந்தேகப்பட்டு பரிசோதித்தபோது ரூ.100க்கு பதில் ரூ.60க்கு நிரப்பியது தெரிந்தது.
இதுகுறித்து அவர்கள் வழக்கறிஞர் அஜீத்குமார் தலைமையில் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தனர். அஜீத்குமார் கூறியதாவது: குறைந்த அளவில் பெட்ரோல் நிரப்பி கையால் எழுதிய ரசீதை வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
பங்க் தரப்பில் சமரசம் பேச முயன்றனர். ஏற்கனவே இதே பிரச்னை தொடர்பாக இந்த பங்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தல்லாகுளம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. நடவடிக்கை குறித்து கேட்ட போது பெட்ரோலியத் துறையில் இருந்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் அதன்பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். ஆனால் பங்க்கில் அதுபோல் எந்த ஆய்வும் நடக்கவில்லை என்றார்.
பங்க் மேலாளர் குமார் கூறியதாவது: அனைவருக்கும் முழு அளவில் பெட்ரோல் நிரப்பப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அவர்கள் இருவருக்கும் முழு அளவில் பெட்ரோல் வழங்கப்பட்டது. இன்னொருவருக்கு ரூ.50 க்கு பெட்ரோல் நிரப்பும்போது பாதியிலேயே தடுத்து தகராறில் ஈடுபட்டனர். வேண்டுமேன்றே எங்கள் மீது போலீசில் புகார் அளித்தனர். விரைவில் உண்மை தெரியவரும் என்றார்.
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின்விற்பனை மேலாளர் சரவணன் கூறியதாவது: புகார் வந்தவுடன் போலீசிற்கு தகவல் தெரிவித்து சரிசெய்து விட்டோம். மின்தடை ஏற்பட்டதால் பெட்ரோல் வழங்கும் இயந்திரம் பாதியில் நின்றது.
மின்சாரம் வந்தவுடன் முழுமையாக வழங்கப்பட்டது. எடை கணக்கிடும் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன் பரிசோதனை செய்த பின் மீண்டும் பெட்ரோல் விநியோகம் துவங்கப்பட்டது என்றார்.