தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புதிரை வண்ணார் சிறப்பு முகாம்

புதிரை வண்ணார் சிறப்பு முகாம்

புதிரை வண்ணார் சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 17, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, ஜூலை 18–

மதுரை மாவட்டத்தில் புதிரை வண்ணார், பழங்குடியினர், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புதிரை வண்ணார், பழங்குடியினர், நரிக்குறவர் நலவாரிய அட்டைகள், ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் ஜூலை 18, 25, ஆக.1, 8 ஆகிய சனிக்கிழமைகளிலும், ஆக. 16 ஞாயிறு அன்றும் நடக்க உள்ளது.

முதற்கட்டமாக இன்று (ஜூலை 18) மாநகராட்சி வார்டு 10, கடச்சனேந்தல் அந்தனேரி கண்மாய் காளியம்மன் கோயில் மண்டபத்தில் காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது. 18 வயது முடிவடைந்து 60 வயதுக்கு மிகாத புதிரை வண்ணார், பழங்குடியினர் ஜாதிச்சான்றிதழ் வைத்துள்ள, வேறு எந்த வாரியத்திலும் உறுப்பினராக இல்லாதவர்கள் தமிழ்நாடு புதிரை வண்ணார், நரிக்குறவர், பழங்குடியினர் ஆகியோருக்கான நலவாரியங்களில் சேர்க்கப்பட உள்ளனர். அவர்கள் அங்கு நடக்கும் முகாமில் உரிய ஆவணங்களுடன் சென்று ஆஜராகி விண்ணப்பிக்கலாம்.

நேரில் வர இயலாதவர்கள் இத்திட்டத்தில் சந்தேகம் இருந்தால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us