ADDED : ஜூலை 09, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
மேலுார்: வேப்படப்பு கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது.
டாக்டர் மோகன்தாஸ் தலைமையில் ஆய்வாளர் தேவி, உதவியாளர் பிரபாகரன், செயற்கை கருவூட்டிகள் சரவணன், கோபால் ஆகியோர் 300க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தினர். கோமாரி நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
