தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஜோசியர் கொலை

ஜோசியர் கொலை

ஜோசியர் கொலை


UPDATED : ஜூலை 09, 2026 06:54 PM

ADDED : ஜூலை 09, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 06:54 PM ADDED : ஜூலை 09, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சம்பக்குளத்தைச் சேர்ந்தவர் ராஜாசிங் 52. மனைவியை பிரிந்து தாயாருடன் வசித்து வந்தார். ஜோசியம், மாந்திரீகம் தொழில் செய்தார். அதிகாலை சர்வேயர் காலனி பிரதான ரோடு கால்வாய் கரையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், நண்பர்கள் மூவருடன் சேர்ந்து இரவில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்தது. புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

11 வயது சிறுமி புகார்: தாய் மீது வழக்கு

மதுரை: சோலையழகுபுரத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த 11 வயது சிறுமி, ஜூலை 8 சைல்டு ஹெல்ப் லைன் 1098 ஐ தொடர்பு கொண்டார். தனது தாய் தொடர்ந்து தன்னை அடிப்பதாக புகார் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தாய் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கின்றனர்.

மின்சாரம் திருடிய காங்., நிர்வாகி

திருமங்கலம்: கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் சின்ன உலகாணி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதை கட்ட அவ்வூர் முன்னாள் ஊராட்சி தலைவரும், காங்., மாவட்ட பொதுக்குழு உறுப்பினருமான சவுந்தரபாண்டி ஒப்பந்தம் எடுத்துள்ளார். கட்டடம் கட்ட தற்காலிக மின் இணைப்பு வாங்காமல் பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டடத்தில் இருந்து கொக்கி போட்டு 40 கிலோ வாட் மின்சாரத்தை திருடியதாக கப்பலுார் மின் உதவி பொறியாளர் செல்வராஜ் புகாரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us