/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மடிப்பிச்சை கேட்டு ராதிகா ஓட்டு வேட்டை
/
மடிப்பிச்சை கேட்டு ராதிகா ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 03, 2024 05:27 AM
திருமங்கலம் : விருதுநகர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராதிகா திருமங்கலம் சட்டசபை தொகுதிக்குஉட்பட்ட கப்பலூரில் கணவர் சரத்குமாருடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்குச் சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் பேசுமாறு கேட்டனர். இதையடுத்து மடிப்பிச்சை கேட்டு பேசி ஓட்டு சேகரித்தார்.
சரத்குமார் பேசியது: தொகுதி பிரச்னைகளை ஆராய்ந்து அதை தீர்க்க பாலமாக ராதிகா இருப்பார். 10 ஆண்டுகள் ஊழல் இல்லாத ஆட்சி. பிரதமரால் வேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ள ராதிகாவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து மேல உரப்பனூர், சாத்தங்குடி, மேலக்கோட்டை, மைக்குடி கிராமங்களிலும் பிரசாரம் செய்தனர்.

