ADDED : ஆக 24, 2024 04:01 AM
திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறாவளியும் கடுமையாக வீசியது.
இதனால் திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 40 அடி உயர மரம் காம்பவுண்ட் சுவர் மீது விழுந்தது. இதில் காம்பவுண்ட் சுவர், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் சேதமடைந்தது.
சின்ன செங்குளம் ரோட்டில் 2 மரங்கள் ரோட்டின் குறுக்காக விழுந்தன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மரங்களை அப்புறப்படுத்தினர்.
மம்சாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் உடைந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது.
திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தி காரை மீட்டனர்.
கப்பலுார் பகுதியில் வீசிய சூறாவளியால் ஓட்டு வீடுகள், கூரை வீடுகளின் மேல் பகுதி பறந்து ரோட்டில் விழுந்தன.

