/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோப் வாங்கினால்தான் ரேஷன் பொருட்கள்
/
சோப் வாங்கினால்தான் ரேஷன் பொருட்கள்
ADDED : மே 10, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தாலுகா ரேஷன் கடைகளில் சோப், டீ துாள், சேமியா, சுக்கு காபி துாள் போன்ற பொருட்கள் வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கார்டுதாரர்கள் கூறியதாவது: இந்த பொருட்களை வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க முடியும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பொருட்களை விற்காவிட்டால் விற்பனையாளர்கள் தங்கள் கையிலிருந்து பணம் செலுத்த வேண்டும் என்பதால் எங்களை வற்புறுத்துகின்றனர் என்றனர். கூட்டுறவு இணை பதிவாளர் குருமூர்த்தி கூறுகையில், ''விருப்பப்பட்டவர்கள் வாங்கி கொள்ளலாம். கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.