ADDED : ஜூன் 24, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி முதல்வர் ராமசுப்பையா தலைமையில் நடந்தது. தலைவர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர் துவக்க உரையாற்றினார். கவுரவ தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரபு இயக்குனர் பிரபு கலந்து கொண்டனர்.
தேசிய மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி கிருத்திகா வரவேற்றார். பேராசிரியர் ரஞ்சித்குமார் தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் சாமிதுரை பேசினார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரோட்ராக்ட் கிளப் மாணவர்கள் 1330 திருக்குறள் பதிவு செய்த வாழ்த்து அட்டை, இனிப்பு கொடுத்து வரவேற்றனர். பேராசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
