ADDED : ஜூலை 01, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: ‘தென்கரையில் பயனற்ற பழைய ரேஷன் கடை கட்டடத்தை அகற்ற வேண்டும்’ என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகே பல ஆண்டுகளாக ரேஷன் கடை செயல்பட்டது. சில மாதங்களுக்கு முன் கண்மாய் செல்லும் வழியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கம் அருகே புதிய கட்டடத்திற்கு கடை மாற்றப்பட்டது.
இதனால் பழைய கட்டடம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. இக்கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது. காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. பகலில் வாகன காப்பகமாகவும், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டடத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றியமைக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
