ADDED : ஜூலை 04, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசிய முதுநிலை வழிகாட்டி சபுராபீவியின் பணி ஓய்வு பாராட்டு விழா வளாகத்தில் நடந்தது.
ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம் உட்பட பலர் பாராட்டினர். கல்வி அலுவலர் நடராஜன் நன்றி கூறினார். அரசு மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன், நேதாஜி சுவாமிநாதன், எழுத்தாளர் அழகர்சாமி, இயற்கை வாழ்வியல் நிபுணர் தேவதாஸ் காந்தி கலந்து கொண்டனர்.