ADDED : செப் 17, 2024 04:04 AM
மதுரை, : வேளாண் துறையின் கீழ் மதுரை மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் 135 டன் அளவு மோட்டா, சன்ன, மிக சன்னரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலுாரில் 85 ஆயிரம், திருமங்கலத்தில் 19 ஆயிரத்து 450 ஏக்கருக்கான ஒருபோக சாகுபடிக்கு நேற்று முன்தினம் (செப். 15) வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, நாற்றுத் தயாரிப்புக்கு தயாராகி உள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான நெல் விதைகள் இருப்பில் உள்ளன.
ஏ.டி.டி., 54 நடுத்தர நெல் ரகம் 13ஆயிரத்து 690 கிலோ, ஏ.டி.டி., 53 ரகத்தில் 5660 கிலோ, ஏ.எஸ்.டி. 16 மோட்டா ரகம் 5800 கிலோ, பி.பி.டி., 5204 சன்னரகம் 5110 கிலோ உள்ளது. சன்னரகத்தில் கோ 51 ரகம் 21ஆயிரத்து 765 கிலோ, கோ 52 ரகம் 12ஆயிரத்து 570 கிலோ, மிக சன்ன ரகத்தில் கோ 55, ஜெ.ஜி.எல். 1798, என்.எல்.ஆர்.34449, ஆர்.என்.ஆர்.15048, டி.கே.எம்.13, வி.ஜி.டி.1 ரகங்களில் 53ஆயிரம் கிலோ இருப்பில் உள்ளது.
மத்திய அரசின் விதை கிராமத் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்குத் தேவையான நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம்.
மதுரை அரசு விதைப் பண்ணை உற்பத்தி செய்த பாரம்பரிய ரகங்களான அறுபதாம் குறுவையில் 1320 கிலோ, துாயமல்லி 940 கிலோ, பூங்கார் 3080 கிலோ உள்ளது.
இந்த ரகங்களுக்கும் கிலோவுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கான நெல் பெறலாம்.
வேளாண் துறையின் கீழ் யூரியா 5952 டன், டி.ஏ.பி., 840 டன், எம்.ஓ.பி., 658 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 3714 டன் இருப்பு உள்ளது. மேலும் கூட்டுறவுத் துறையின் கீழ் 174 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உரம் இருப்பை அறிய: 93634 40360

