/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாசிப்பெட்டி செல்லும் பாதை சீரமைப்பு
/
மாசிப்பெட்டி செல்லும் பாதை சீரமைப்பு
ADDED : பிப் 22, 2025 05:48 AM
உசிலம்பட்டி: பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி விழாவிற்காக உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து அம்மன் உடைமைகள் அடங்கிய 5 மாசிப் பெட்டிகளை பூஜாரிகள் எடுத்துச் செல்வர். வடகாட்டுப்பட்டி, மேக்கிழார்பட்டி, இஸ்மாயில் மடம், இளந்தோப்பு சென்று அங்கு பெட்டிகளில் உள்ள பொருட்களை பக்தர்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள். பின்னர் பாப்பாபட்டி கோயிலுக்கு எடுத்துச் செல்வர்.
இதற்காக பாப்பாபட்டி வரை 12.கி.மீ., பாதையை சீர்படுத்தும் பணியில் விழா கமிட்டி ஈடுபட்டுள்ளனர்.
பாரம்பரியமாக சென்று வரும் ரயில்வே பாதை அருகில் உள்ள தண்டவாளங்களை அகற்றக்கோரி கமிட்டியினர், உசிலம்பட்டி தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி ஆகியோர் ரயில்வே அதிகாரிகளை சந்தித்தனர். விழா முடிந்ததும் மீண்டும் பழைய இடத்தில் தண்டவாளங்களை வைப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பாதை சீரமைப்பு பணி நடந்தது.

