ADDED : ஏப் 17, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி - பேரையூர் ரோட்டில் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள், மாணவர்கள் அவதி அடைகின்றனர்.
இப்பகுதி கடைகள் 20 அடிக்கு மேல் ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். 100 அடி அகலம் உள்ள இந்த ரோடு 60 அடியாக சுருங்கிவிட்டது. ஆக்கிரமிப்பால் பஸ்கள் ஊர்ந்து செல்கின்றன. பயணிகள் நடந்து செல்வதில் சிரமம் உள்ளது. இந்த ரோட்டில் அரசு பள்ளி உள்ளது. ஆக்கிரமிப்பால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மாநில நெடுஞ்சாலைத் துறையினர் கண்டும், காணாமல் உள்ளனர். ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம் உள்ளது.

