நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி வார்டு 11 கள்ளர் தெருவில் சாக்கடை துார்ந்து போய் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. 'தெரு ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருகிறோம். சாக்கடையை புதுப்பித்து தரவேண்டும்' என தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த வார்டு கவுன்சிலரும், நகராட்சி தலைவருமான சகுந்தலா மறுப்பதாக கூறி இத்தெருவைச் சேர்ந்தவர்கள் பா.ஜ., துணைத்தலைவர் ஜெயராஜ் தலைமையில் நேற்று காலை 9:20 முதல் 9:30 வரை மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.

