நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே வாகைகுளம் ஊராட்சியில் குடிநீர் குழாய் செல்லும் பாதை தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதனை கண்டித்தும், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும் 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் குலமங்கலம், செல்லுார் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
வடக்கு தாசில்தார் மஸ்தான் கனி, மேற்கு ஒன்றிய கமிஷனர் சுகுணா பாய், அலங்காநல்லுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
வருவாய் துறையினர் அளவீடு செய்து மணல் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர்.