/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.4 கோடிக்கு மில் வாங்கிய கொள்ளை கும்பல் தலைவன் கைது
/
ரூ.4 கோடிக்கு மில் வாங்கிய கொள்ளை கும்பல் தலைவன் கைது
ரூ.4 கோடிக்கு மில் வாங்கிய கொள்ளை கும்பல் தலைவன் கைது
ரூ.4 கோடிக்கு மில் வாங்கிய கொள்ளை கும்பல் தலைவன் கைது
ADDED : ஜூலை 11, 2024 05:36 AM

ராஜபாளையம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை, பணம் கொள்ளையடித்து ரூ. 4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளை கும்பல் தலைவன் மூர்த்தியை கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை நோட்டமிட்டு முகமூடி அணிந்த நபர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதுவரை கொள்ளையடித்தது ஆயிரம் பவுனுக்கும் அதிகம் என்பதுடன் திருடிய பணத்தில் ராஜபாளையத்தில் ரூ.4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கியது தெரிந்தது.
இந்நிலையில் ஜூன் 18ல் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த அருண்குமார் 23, சுரேஷ்குமாரை 26, பிடித்து விசாரித்ததில ராஜபாளையம் ஆண்டாள்புரத்தில் கணவன்,மனைவியை கட்டி போட்டு நகைகளை திருடிய கும்பல் என்று தெரிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தி 33, மூளையாக செயல்பட்டது தெரிந்து அவரது தாய் சீனித்தாய் 53, மனைவி அனிதா 29, உறவினர் நாகஜோதி 25, லட்சுமி ,மகாலட்சுமி ,மோகன் ஆகிய ஆறு பேர் என மொத்தம் எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில் தமிழகம் முழுவதும் 45க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளைடித்த ரூ. 75 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததுடன் ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்பின்னிங் மில் வாங்கியதற்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி மூர்த்தியை தனிப்படை போலீசார் கோவையில் வைத்து கைது செய்துள்ளனர்.