/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குட்கா, புகையிலை வேட்டையில் ரூ.80.75 லட்சம் அபராதம் வசூல்
/
குட்கா, புகையிலை வேட்டையில் ரூ.80.75 லட்சம் அபராதம் வசூல்
குட்கா, புகையிலை வேட்டையில் ரூ.80.75 லட்சம் அபராதம் வசூல்
குட்கா, புகையிலை வேட்டையில் ரூ.80.75 லட்சம் அபராதம் வசூல்
ADDED : ஆக 15, 2024 03:53 AM
மதுரை, : உணவுப் பாதுகாப்பு துறையினர், போலீசார் இணைந்து பெட்டிக்கடைகளில் நடத்திய சோதனையில் குட்கா, புகையிலை வைத்திருந்த 597 கடைகளுக்கு ரூ.80 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: கடந்தாண்டு நவ.,1ல் போலீசாருடன் இணைந்து 19 குழுக்களை உருவாக்கினோம். வாரத்திற்கு 18 குழுக்கள் கிராம, நகர்ப்புற பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர். இதுவரை 15 ஆயிரத்து 79 கடைகளில் சோதனையிடப்பட்டது. மொத்தம் 2013 கிலோ தடை செய்த குட்கா, புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. 597 கடைகள் மூடப்பட்டு ரூ.80 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடைகளில் 2 கிலோ அளவுக்கு கீழ் புகையிலை பொருட்கள் இருந்தால் நோட்டீஸ், அபராதம் விதித்து, அவற்றை வாரந்தோறும் மொத்தமாக சேகரித்து அழிக்கப்படுகிறது. 2011 முதல் தற்போது வரை 10 ஆயிரத்து 174 கிலோ புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் முதல் ஜூலை 31 வரை 11 ஆயிரத்து 705 ஓட்டல், உணவகங்கள், பழக்கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 199 ஓட்டல்களில் சுகாதாரமற்ற, கெட்டுப்போன உணவு வைத்திருந்ததற்காக நோட்டீஸ் வழங்கி ரூ.ஒரு லட்சத்து 99 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
1852 பழக்கடைகளில் ஆய்வு செய்து 450 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.