ADDED : ஆக 05, 2026 08:00 PM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில மையத்தின் முடிவுப்படி 1500 காலியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர், ஒன்றிய பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களை டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஏழாண்டு பணிமுடித்த பணிமேற்பார்வையாளரை இளநிலை பொறியாளராக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்சங்களை வலியுறுத்தி பேசினர். மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பொருளாளர் அமுதரசன் முன்னிலை வகித்தார். அருண்குமார் நன்றி தெரிவித்தார். மதுரை கிழக்கு வட்டாரத்தில் தலைவர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பரங்குன்றம்:: திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். பொருளாளர் பிரபு, தணிக்கையாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், நிர்வாகிகள் பாலமுருகன், சகாயராஜ் பேசினர். மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் பேசினர். ராஜாமணி நன்றி கூறினார்.
