ADDED : மார் 13, 2025 05:17 AM
மதுரை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடிக்கு, ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் குமரேசன் மனு அளித்துள்ளனர்.
அதில், ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் தற்போது பெறும் சம்பளத்தில் 50 சதவீதம் இருக்க வேண்டும்.
ஊராட்சிகளில் ரூ.5300 தொகுப்பூதியம் பெறும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒன்றிய பொருளாளர், உதவிப் பொறியாளர்களுக்கு, உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு உதவிப் பொறியாளராகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஒன்றியப் பணிகளை ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு ஜீப் வேண்டும். ஊராட்சி துாய்மை காவலர்களுக்கு மாதச்சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.