ADDED : ஜூன் 19, 2026 03:30 PM
மதுரை, ஜூன் 20-
மதுரை, சிவகங்கை மாவட்ட பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமங்கலம் மேலக்கோட்டை பகுதியில் நடந்தது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் துவக்கி வைத்து, நடத்தை சார்ந்த பாதுகாப்பு குறித்து பேசினார். சிவகாசி பயிற்சி மைய இணை இயக்குனர் குமரேஷ், ரசாயன பொருட்களை கையாள்தல், பாதுகாப்பு, அதிகஆபத்துள்ள பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் உளவியல் தொடர்பாக பேசினார்.
மதுரை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தொழிற்சாலைகள் சட்டத்தின் முக்கிய அம்சங்கள், தொழிற்சாலை நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்து விளக்கினார். சிவகங்கை துணை இயக்குனர்கள் சஜின், சுதாகர் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வின் போது கண்டறியப்பட்ட விதிமீறல்கள் குறித்து பேசினர். உதவிஇயக்குனர்கள் கருணாகரன், சாய்ராம் ஆகியோர் பணியிட பாதுகாப்பு பற்றி பேசினர்.
