ADDED : ஜூன் 19, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி, ஜூன் 20-
கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மாணவர் மன்றத் தேர்தலையொட்டி கல்லுாரி பேசில் சேவியர் மின்னணு ஓட்டுப்பதிவை துவக்கி வைத்தார்.
செயலர் ஜோசப், இணை முதல்வர் ஜோசப் வில்சன் முன்னிலையில் நடந்த தேர்தலில் 9 மாணவர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 925 ஓட்டுகளில் 669 ஓட்டுகள் பதிவாயின. எண்ணிக்கையில் நுண்கலைச் செயலராக விஷ்ணு தேவ், விளையாட்டுப் பிரிவு செயலராக விஷால், மூன்றாமாண்டு மாணவப் பிரதிநிதியாக தீபக், இரண்டாமாண்டு மாணவப் பிரதிநிதியாக பிரசன்னா தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
