ADDED : ஆக 07, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க பேரவை கூட்டம் மற்றும் ஆண்டு விழா நடந்தது.
தலைவர் தவமணி தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் பீர்முகம்மது வரவேற்றார். செயலாளர் சேகர்ஸ்ரீதர் ஆண்டறிக்கையும், பொருளாளர் ராமலிங்கம் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். துணைத் தலைவர் துரைராஜ், இணைச் செயலாளர் முகமது அலி, ஓய்வு கலெக்டர் கருணாகரன், ஓய்வூதிய சங்கத் தலைவர் பழனிச்சாமி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலக சங்க மாநில துணைத் தலைவர் தாமோதரன் பேசினர். அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். இணைச் செயலாளர் பரஞ்ஜோதி நன்றி கூறினார்.