/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லேபர் கான்ட்ராக்ட்டுக்கு ஜி.எஸ்.டி., கணக்கீடு எப்படி தெளிவுபடுத்த சவுராஷ்டிரா வர்த்தகர்கள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 13, 2024 04:23 AM
மதுரை : 'லேபர் கான்ட்ராக்ட் எடுத்தால் எவ்வாறு ஜி.எஸ்.டி., கணக்கிட்டு பில் தருவது என்ற விவரம் தெளிவாக தரவேண்டும்' என சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பினர் வலியுறுத்தினர்.
மதுரையில் வணிக வரித்துறை குறைதீர் கூட்டம் துணை கமிஷனர் தங்கமணி தலைமையில் நடந்தது. சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் செயற்குழு உறுப்பினர் என்.எஸ். பிரேம்குமார், நிர்வாகி எஸ்.எம்.கார்த்திக்குமார் மனு அளித்தனர்.
அதில், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த பொறியாளர்கள் பொதுமக்களுக்கு தரும் மதிப்பீட்டில் 7 முதல் 10 சதவீத லாபத்தில் வேலை செய்வதால் தனிநபர்கள் கூடுதலாக 18 சதவீத வரிசெலுத்த விரும்பவில்லை.
எனவே அவர்கள் மேஸ்திரிகளுக்கு வேலை வழங்க முன் வருகின்றனர்.இதற்கு தீர்வு காண வேண்டும். லேபர் கான்ட்ராக்ட் எடுத்தால் எவ்வாறு ஜி.எஸ்.டி., கணக்கிட்டு பில் தருவது என்ற விவரம் வேண்டும்.
தற்போது மத்திய அரசு பண பதிவேட்டில் தானாக வரவு வைக்கும் முறையை கொண்டு வந்துள்ளது.
இதில் உள்ள நடைமுறை சிக்கலை பரிசீலித்து நேரடியாக செலுத்தும் முறையை கொண்டு வரவேண்டும்.
பல அறிவிப்புகள் சிறுவணிகர்களை பாதிக்கும் மாற்றங்களுடன் வருவதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
எனவே 6 மாதங்களுக்கு ஒருமுறை புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும்.
பறக்கும் படையால் சிக்கல் ஏற்படும்போது அபராத தொகையை, அட்வான்ஸ் வரி போன்று அதற்கான தொகையை மாதாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது கழித்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.