/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீரைக் காப்பாற்றி உழவன் கண்ணீர் துடைக்க வேண்டும்: கருத்தரங்கில் யோசனை
/
தண்ணீரைக் காப்பாற்றி உழவன் கண்ணீர் துடைக்க வேண்டும்: கருத்தரங்கில் யோசனை
தண்ணீரைக் காப்பாற்றி உழவன் கண்ணீர் துடைக்க வேண்டும்: கருத்தரங்கில் யோசனை
தண்ணீரைக் காப்பாற்றி உழவன் கண்ணீர் துடைக்க வேண்டும்: கருத்தரங்கில் யோசனை
ADDED : மே 13, 2024 06:15 AM
மதுரை: 'உரிய பருவங்களில் மழை பெய்யாததால், தண்ணீரை காப்பாற்றி உழவன் கண்ணீரை காக்க வேண்டும்'' என மதுரையில் தர்மம் இயக்கம் சார்பில் நடந்த 'தன்னிறைவு தமிழகம்' என்ற கருத்தரங்கில் பேசினர்.
கருத்தரங்கில் திருச்சி பசுமை சிகரம் அறக்கட்டளை நிறுவனர் யோகநாதன் வரவேற்றார். வழக்கறிஞர் குருசாமி வரைவுக் கொள்கை வெளியிட்டார்.
நபார்டு வங்கி முன்னாள் தலைமை பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா பேசியதாவது:
25 ஆண்டுகளாக உரிய பருவத்தில் மழை பெய்வதில்லை. அப்படிப் பெய்தாலும், ஓரிரு நாளில் கொட்டித் தீர்த்துவிடுகிறது.
முறையாக மழைநீரை சேமிக்கும் வசதி மக்களிடம் இல்லை.
நகரமயமாக்கத்தால் தொழிற்சாலை, மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளன. கிராம உதவியாளர் துணையுடன் மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நீர் நிலைகளை துார்வாரி, கிடைக்கும் நீரை முறையாக பூமிக்குள் சேமிக்க வேண்டும். மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும். தண்ணீரை காத்து, உழவன் கண்ணீரை துடைக்க வேண்டும் என்றார்.
வேளாண் கல்லுாரி, ஆராய்ச்சி மைய டீன் மகேந்திரன் பேசியதாவது: 25 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் பழங்கால முறைப்படி நீரை சேமித்து வந்தனர். காலச் சூழலுக்கு ஏற்ப விவசாயிகளும் மாறி வருகின்றனர். மண்ணுக்கு ஏற்ற பயிரை தேர்வு செய்து அதற்கான வழிமுறைகளுடன் பயிரிட வேண்டும். அவற்றை விற்கும் மதிப்புக்கூட்டு விலையையும் அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
நிர்வாகிகள் அலெக்சாண்டர், மீரா உசேன், அருள் சேகர், வெள்ளைச்சாமி, சந்தானம், குணசேகரன், பரமசிவம், முருகேசன், செல்வராஜ், அக்னி அறக்கட்டளை சைவ சிரோமணி மனோகரன் தன்னார்வ அமைப்புகள், 15 மாவட்ட விவசாய சங்கங்கள், நீர் நிலைகளை பாதுகாக்கும் அமைப்புகள் பங்கேற்றன.