ADDED : ஜூலை 18, 2024 04:09 AM

திருப்பரங்குன்ற : மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் காமராஜர் பிறந்த தினவிழா, அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
பாண்டியன் நகர் பூங்காவில் நடந்த விழாவிற்கு மன்றத் தலைவர் அய்யல் ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் காளிதாசன் முன்னிலை வகித்தனர். செயலாளர் குலசேகரன் வரவேற்றார்.
திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் உள்ள ஐந்து பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 21 மாணவர்களுக்கு, சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், காமராஜர் விருது, இலவச நோட்டு, எழுதுபொருட்களை வழங்கினார். அவரது சொந்த நிதியில் 21 மாணவர்களுக்கும் தலா ரூ. ஆயிரம் கல்வித் உதவித்தொகை வழங்கினார்.
கவுன்சிலர் இந்திராகாந்தி, திருநகர் மக்கள் மன்ற துணைத் தலைவர் பொன் மனோகரன், நாகராஜன், நிர்வாகிகள் வேட்டையார், கிருஷ்ணசாமி, குப்புசாமி, ஆனந்தராஜ், சங்கரய்யா, பாஸ்கர் பாண்டி, அரவிந்தன் கலந்து கொண்டனர்.

