ADDED : பிப் 26, 2025 05:54 AM
விளையாட்டு விழா
மதுரை: பாத்திமா கல்லுாரியின் 72ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. மாணவியர் பேரவைத் தலைவர் பபிலா ஜோஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் போலீஸ் துணை கமிஷனர் அனிதா பேசுகையில், '' மாணவியர் காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலி, போலீஸ் அக்கா போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்'' என்றார். விளையாட்டுத் துறை பேராசிரியர் மாதரசி ஆண்டறிக்கை வாசித்தார். அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் பிரின்ஸ், தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் பினு ரமேஷ் அணிவகுப்பின் சிறந்த அணியை தேர்வு செய்தனர். கணினித் துறை முதல் பரிசு, ஆங்கிலத் துறை 2ம் பரிசு, தமிழ்த் துறை மாணவர்கள் 3ம் பரிசு பெற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி செயலாளர் இக்னேஷியஸ் மேரி, முதல்வர் செலின் சகாயமேரி, துணை முதல்வர்கள் அருள்மேரி, டயானா கிறிஸ்டி, மீனாட்சி பேராசிரியர்கள் ரேவதி, சுமைதா பங்கேற்றனர்.
பாரம்பரிய கலாசார விழா
மதுரை: பாத்திமா கல்லுாரியில் தமிழ் உயராய்வு மையம், வரலாற்றுத்துறை சார்பில் தமிழர்களின் கலாசார பாரம்பரிய கருத்தரங்கம் நடந்தது. மாணவி கோமதி வரவேற்றார். ஓய்வு ஐ.ஜி., பிரபாகரன் பேசுகையில், '' கீழடி அகழாய்வு தமிழர்களின் பண்பாட்டினை பறைசாற்றும் ஆவணமாக திகழ்கிறது. கற்காலம், இரும்புக்காலங்கள் தமிழகர்களின் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. சங்க இலக்கியம் வரலாற்று ஆவணமாக உள்ளது'' என்றார். மாணவி நாகலட்சுமி நன்றி கூறினார். மையத் தலைவர் லதா, வரலாற்றுத்துறை தலைவர் சாராள் இவாஞ்சலின் பங்கேற்றனர்.
கலை விழா
மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் பொருளாதாரத்துறை சார்பில் கலை விழா நடந்தது. மாணவர் தலைவர் அழகர்சாமி வரவேற்றார்.
போக்குவரத்து இணை கமிஷனர் வனிதா பேசுகையில், ''பொருளாதாரம் என்பது போட்டித் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ச்சிக்கு உதவும் கருத்துகள், வேலை வாய்ப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது. மாணவர்கள் கற்பதை நிறுத்த கூடாது'' என்றார். வினாடி வினா, கட்டுரை வரைதல், குழு, தனி நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுழற் கோப்பையை லேடி டோக் கல்லுாரி மாணவர்கள் வென்றனர். துணை முதல்வர் மார்ட்டின் டேவிட், பேராசிரியர் இயேசுராஜன், முன்னாள் மாணவர்கள் பசல் முகம்மது யூசுப், ரூபன் தாமஸ் பங்கேற்றனர்.
ஆண்டு விழா
மதுரை: சுந்தரராஜபுரம் ஓ.பி.ஆர்., ரெட்டி நர்சரி, பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. கலைநிகழ்ச்சிகள், அபாகஸ், கராத்தே, யோகா நடந்தது. மதுரை தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் சுதாகர், ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர் விஜயராஜ், மதுரை ரெட்டி சங்கத் தலைவர் ராஜா பூர்ணசந்திரன், தாளாளர் துரைராஜ், தலைவர் ரமேஷ், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய ஒருமைப்பாட்டு கருத்தரங்கு
பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் தேசிய என்.எஸ்.எஸ்., முகாம் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாடு , கலாசாரம் மற்றும் பண்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. மாணிக்கம் தாகூர் எம்.பி., பேசுகையில், ''இந்தியாவின் பல்வேறு கலாசாரங்கள், பாரம்பரியங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் முக்கிய கூறுகளாக உள்ளன. இளைஞர்கள் பேணிக் காக்க வேண்டும்'' என்றார். என்.எஸ்.எஸ். மாநில திட்ட அலுவலர் குணாநிதி, மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பாண்டி, கல்லுாரி முதல்வர் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் விஜயகுமார், இருளப்பன், ராமகிருஷ்ணன் முகாம் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
கல்வி உபகரணங்கள் வழங்கல்
திருப்பரங்குன்றம்: அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் சூரிய நாராயணன் தலைமையில், அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா சொந்த செலவில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள எழுது பொருட்கள், உபகரணங்களை வழங்கினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை: செந்தமிழ்க் கல்லுாரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சாந்தி தேவி தலைமை வகித்தார். பேராசிரியர் நேருஜி வரவேற்றார். எஸ்.ஐ., பரமசிவம், சுஜாதா, துணை முதல்வர் ரேவதி சுப்பு லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார்.
பட்டமளிப்பு விழா
உசிலம்பட்டி: ஸ்ரீரங்காபுரம் கிருஷ்ணா வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாவது பட்டமளிப்பு விழா தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் சீனிவாசன், கவிதா, லதா, சுதா முன்னிலை வகித்தனர். முதல்வர் பால்பாண்டி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் லயன் கல்விக் குழும தலைவர் பழனிசாமி, 163 மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கினார். திண்டுக்கல் சந்திராயன் ஐ.ஏ.எஸ்., அகாடமி தலைவர் சுகுமாரன் அதிக மதிப்பெண் பெற்ற, விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.