ADDED : ஆக 13, 2024 05:55 AM
தாய்ப்பால் வார விழா
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். மாணவி பவித்ரா வரவேற்றார். உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் கோபிமணிவண்ணன் பேசினார். தாய்ப்பால் சத்துக்கள் குறித்து கலந்துரையாடல், ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. கணினி தொழில்நுட்ப துறை தலைவர் கார்த்திகா நடுவராக இருந்தார். மாணவர் மந்திரமூர்த்தி நன்றி கூறினார். பேராசிரியர்கள் கவிதா, அனிதாஸ்ரீ ஒருங்கிணைத்தனர்.
சி.இ.ஓ., ஆய்வு
மதுரை: கிழக்கு ஒன்றியம் உலகநேரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கான பிஸியோதெரபி செயல்பாடுகளை சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறப்பு குழந்தைகளுக்காக 15 ஆயத்த மையங்கள் (எஸ்.ஆர்.பி.,) செயல்படுகின்றன. இவற்றில் தலா 20 மாணவர்கள் உள்ளனர். இம்மையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் உலகநேரி பள்ளி மையத்திற்கு சென்ற சி.இ.ஓ., அங்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி செயல்பாடுகள், மதிய உணவு உண்ணும் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பிஸியோதெரபிஸ்ட்டுகள், ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.

