ADDED : மார் 01, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தோப்பூர் ஆஸ்டின்பட்டி சிவானந்த வித்யாலயா மழலையர், தொடக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
நிர்வாக தலைவர் சுவாமி சுந்தரானந்த தலைமையில் நடந்த கண்காட்சியில் திருவேடகம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி செயலாளர் சுவாமி பரமானந்தா, தனக்கன்குளம் மேரி லேண்ட் மழலையர், தொடக்கப் பள்ளித் தாளாளர் எட்வின், ஆசிரியர்கள், மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். கப்பலுார் தியாகராஜர் ஆலை பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். தாளாளர் கணேஷ் பாபு, முதல்வர் கண்ணன் ஏற்பாடு செய்திருந்தனர்.