/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொளுத்தும் வெயிலால் '‛நீர்க்கடுப்பு' வரலாம்
/
கொளுத்தும் வெயிலால் '‛நீர்க்கடுப்பு' வரலாம்
ADDED : மே 08, 2024 05:11 AM
மதுரை, : கொளுத்தும் வெயிலால் 'நீர்க்கடுப்பு', சிறுநீர்ப்பாதையில் தொற்று வரும் வாய்ப்பு உள்ளதால் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும்'' என சுகாதார துணை இயக்குநர் குமரகுரு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தற்போதைய வெயிலில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளின் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பில்லை.
உடலில் நீர்ச்சத்து குறைவது தான் பிரச்னையாக இருக்கும். அதேபோல ரத்தஅழுத்தத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். தாகத்திற்கு ஏற்ப தொடர்ந்து தண்ணீர் குடித்து உடலின் நீர்ச்சத்து குறையாமல் கண்காணிக்க வேண்டும்.
வெறும் தண்ணீர் குடிப்பதை விட ஓ.ஆர்.எஸ்., எனப்படும் உப்பு, சர்க்கரை கலந்த கரைசல் உடலுக்கு நல்லது.
அரசு அமைத்துள்ள நீர்ப்பந்தலில் ஓ.ஆர்.எஸ்., கலந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த பாக்கெட்டுகளை இலவசமாக பெறலாம்.
வெயில் தொடரும் வரை வைரஸ் காய்ச்சல் போன்ற பிரச்னை வர வாய்ப்பில்லை. திடீர் மழை பெய்யும் போது வைரஸ், பாக்டீரியா கிருமிகளின் முட்டைகள் பொரிந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
அப்போது தான் சளி, காய்ச்சல், வைரஸ் தொந்தரவு வரும் என்பதால் மழை பெய்தபின் கவனம் தேவை என்றார்.

