ADDED : ஜூலை 30, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
மதுரை: தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவித்து, அவற்றின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு ராணி தெரிவித்துள்ளார்.
விதை உற்பத்தி மானியமாக விதையின் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், வயல் செயல் விளக்கங்களுக்காக எக்டேருக்கு ரூ.7500 நிதியுதவி வழங்கப்படுகிறது. விதைகள், நுண்ணுாட்டக்கலவை, உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்படுகின்றன. நுண்ணுாட்டக் கலவை, உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியம், புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப ஆலோசனை, பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.
