/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாடு அவசியம்: யோக நிகழ்ச்சியில் அறிவுரை
/
வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாடு அவசியம்: யோக நிகழ்ச்சியில் அறிவுரை
வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாடு அவசியம்: யோக நிகழ்ச்சியில் அறிவுரை
வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாடு அவசியம்: யோக நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : ஜூன் 17, 2024 12:52 AM
மதுரை: சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு பிரம்ம குமாரிகள் சார்பில் மதுரை காந்தி மியூசியதில், மாவட்ட அளவிலான கூட்டு யோகா நிகழ்ச்சி நடந்தது. செந்தாமரைதியான வர்ணனை அளித்தார்.
எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் பேசுகையில், 'இந்த உலகிற்கு யோகத்தை கற்றுக்கொடுத்தவர் சிவபெருமான். நம் நாடுதான் யோகாசனத்தில் உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடி.சிவனின் 108 தாண்டவங்களும் 108 யோக முறையை விளக்குகிறது' என்றார்.
மாநகராட்சி துணை கமிஷனர் சரவணன் பேசுகையில், 'மதுரை, பெண்கள் அரசாளும் இடமாகும். நவீன வளர்ச்சியின் சிக்கல்களைப் போக்குவதில் தியானம் முக்கிய பங்காற்றுகிறது. தியானம்செய்கிறவர்களுக்கு வெள்ளை அணுக்கள் அதிகரிப்பதோடு நேர்மறை மாற்றம் ஏற்படும்' என்றார்.
ஒருங்கிணைப்பாளர் உமா பேசுகையில், 'உடல் நோயை போக்கும் ஓமியோபதி, அலோபதி போன்று மனநோய்க்கு மருந்தாக 'பரம்பதி' என்னும் இறைவன் இருக்கிறார். இறைவனை அன்போடு நினைவு செய்வதே ராஜயோக தியானம். அதன் மூலம் சவுபாக்கியம் நிறைந்த ராஜயோக வாழ்க்கை வாழலாம்' என்றார்.
அரசு மருத்துவமனை முதல்வர் தர்மராஜ் பேசுகையில், 'ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தியானம்அருமருந்தாகும். மக்கள் தங்கள் வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாட்டைகடைபிடிப்பது அவசியம்' என்றார்.
மவுண்ட் அபு பண்புக்கல்வி நிகழ்வுகள் துணை இயக்குநர் ஜெயக்குமார் பேசுகையில், 'உடல் ஆரோக்கியத்திற்கு ஆசனம், பிராணாயாமம் அவசியம். மனமாசுகளை அகற்றும் முயற்சியே தியானமாகும். அதன் மூலம் மனவலிமை அதிகரிக்கிறது' என்றார்.
மியூசிய செயலாளர் நந்தாராவ் பேசுகையில், 'மதுரையில் தான் காந்தி புரட்சி செய்தார். ஆன்மிகம், தியானம், யோகா என கூட்டாக செய்வதில் அதிக நன்மை அடங்கியுள்ளது. பிரம்ம குமாரிகள் எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தனர்' என்றார்.
நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று யோகா, தியானம் செய்தனர். அவர்களுக்கு தியான விளக்கு வழங்கப்பட்டது. மனபாரம் குறைத்திட மனதிற்கு ஓய்வளிக்கும் காணொளி அரங்கம் பொதுமக்கள் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.