/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேகாத வெயிலில் ஓட்டு கேட்டும் தோல்வியை தழுவியதால் மனஉளைச்சல் செல்லுார் ராஜூ சொல்கிறார்
/
வேகாத வெயிலில் ஓட்டு கேட்டும் தோல்வியை தழுவியதால் மனஉளைச்சல் செல்லுார் ராஜூ சொல்கிறார்
வேகாத வெயிலில் ஓட்டு கேட்டும் தோல்வியை தழுவியதால் மனஉளைச்சல் செல்லுார் ராஜூ சொல்கிறார்
வேகாத வெயிலில் ஓட்டு கேட்டும் தோல்வியை தழுவியதால் மனஉளைச்சல் செல்லுார் ராஜூ சொல்கிறார்
ADDED : ஜூலை 16, 2024 04:57 AM
மதுரை : ''வேகாத வெயிலில் ஓட்டு கேட்டும் அ.தி.மு.க., கோட்டையான மதுரையில் தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்,'' என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
அவர் கூறியதாவது: சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில் எப்படி தி.மு.க.,வினர் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்.
சட்டம் ஒழுங்கு இவ்வளவு சீர்கெட்டு இருக்கும்போது 'தி.மு.க.,வை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது' என காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம். அ.தி.மு.க., ஆட்சிதான் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.
மதுரையில் வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம். ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா. குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு ஓட்டளித்தனர்.
சிறுபான்மையினர் காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு ஓட்டளித்தனர். இதில் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம். பல இடங்களில் இரண்டாவது இடம் பெற்றோம். இது குறித்தும், நான் பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும் பொதுச்செயலாளர் பழனிசாமி எதுவும் கூறவில்லை.
அ.தி.மு.க., கோட்டையான மதுரையில் தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்.
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.
இதுபோன்ற களங்கம் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில்தான் ஏற்படும். கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

