/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்பதே கிடையாது; சொல்கிறார் செல்லுார் ராஜூ

ADDED : செப் 16, 2024 06:35 AM
மதுரை: ''தமிழகத்தில் திராவிட கட்சிகளே ஆட்சிக்கு வரமுடியும். இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: பா.ஜ.,வினர் தேர்தலுக்கு முன்பு தமிழ், தமிழர்கள் என்று பேசுவர். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் தமிழர்களை அவமதிப்பர்.
இதுதான் பா.ஜ., கட்சி. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. மதவாத சக்தியாக இருப்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது.
தமிழகத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., என திராவிட கட்சிகள்தான் ஆட்சிக்கு வரமுடியும். மது ஒழிப்பு மாநாடு மட்டுமல்ல, அனைத்து போதை ஒழிப்பு மாநாடும் நடத்தும் அளவுக்கு போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
இங்கு அ.தி.மு.க., தி.மு.க., என யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. நல்லாட்சிக்கு அது சரிப்பட்டு வராது.
பல மாநிலங்கள் இதற்கு உதாரணம் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அளவு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். பென்னிகுவிக் அணை கட்டிக் கொடுத்து ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்தார்.
இப்பிரச்னையில் ஒரு வெள்ளைக்காரருக்கு இருந்த இளகிய மனசு முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.
விநாயகர் சதுர்த்திக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்காதது அவரது தனிப்பட்ட விருப்பம். ஸ்டாலினிடம் இதுபோன்று கேட்க முடியுமா. இவ்வாறு அவர் கூறினார்.