ADDED : ஆக 10, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
மதுரை: டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமத்தில் மகரிஷி அருணாச்சலம் நினைவு காந்திய சிந்தனை பேராசிரியர்கள் கருத்தரங்கு நடந்தது.
கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். ஆசிரமத்தலைவர் ரகுபதி தொடங்கி வைத்தார். தேசிய காந்தி மியூசிய இயக்குநர் அண்ணாமலை தலைமை வகித்தார். மதுரை காந்தி மியூசிய காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், முதல்வர் சேதுராக்காயி முன்னிலை வகித்தனர். செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார், திருநெல்வேலி சாரதா கல்லுாரி கல்வி இயக்குநர் சந்திரசேகரன், காந்தி நினைவு நிதி கல்விப் பிரிவு இயக்குநர் ஆண்டியப்பன், செயலாளர் ராஜேந்திரன், மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி துணை முதல்வர் கபிலன், ஆசிரம செயலாளர் ராகவன் உட்பட பலர் பேசினர்.
