/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செப். 15 ல் ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர்
/
செப். 15 ல் ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர்
ADDED : ஆக 24, 2024 04:04 AM
மதுரை: ''மேலுார், திருமங்கலம் பகுதியில் ஒரு போகத்திற்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடிக்கு செப். 15 ல் தண்ணீர் திறக்கப்படும்'' என நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பேரணை முதல் கள்ளந்திரி வரையான 45 ஆயிரம் ஏக்கர் இருபோக சாகுபடியின் முதல் போகத்திற்கு ஜூலை 3 ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 45 நாட்களுக்கு தினமும் 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இடையிடையே மழை தொடர்ந்ததால் ஒருமுறை நிறுத்தப்பட்டு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்றுடன் 45 நாட்களுக்கு மேலான கணக்கு முடிவடைந்த நிலையில் இன்று (ஆக. 24 ) முதல் அடுத்த 75 நாட்களுக்கு முறைப்பாசன தண்ணீர் விடப்படும். பயிர் அறுவடை காலம் 120 நாட்கள் என்பதால் 5 நாட்களுக்கு ஒருமுறை 5 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விடப்படும். மேலுார், திருமங்கலத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் ஒரு போக நெல் சாகுபடிக்கு செப். 15ல் தண்ணீர் திறக்கப்படும் என்றார்.