sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குழு விளையாட்டுக்கு தனித்தனி 'ஆன்லைன்' பதிவு; சுணக்கத்தில் முதல்வர் கோப்பை விண்ணப்பங்கள்

/

குழு விளையாட்டுக்கு தனித்தனி 'ஆன்லைன்' பதிவு; சுணக்கத்தில் முதல்வர் கோப்பை விண்ணப்பங்கள்

குழு விளையாட்டுக்கு தனித்தனி 'ஆன்லைன்' பதிவு; சுணக்கத்தில் முதல்வர் கோப்பை விண்ணப்பங்கள்

குழு விளையாட்டுக்கு தனித்தனி 'ஆன்லைன்' பதிவு; சுணக்கத்தில் முதல்வர் கோப்பை விண்ணப்பங்கள்


ADDED : ஆக 15, 2024 04:42 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : முதல்வர் கோப்பைக்கான குழு விளையாட்டுப் போட்டிகளுக்கு தனித்தனியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதிவு மிக குறைந்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தாண்டு முதல்வர் கோப்பைக்கான குழு விளையாட்டுப் போட்டிகளுக்கு ரூ.37 கோடி வரை பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து வகையின் கீழ் தடகள, குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் முதல் பரிசுக்கு ரூ.3000, 2ம் பரிசு ரூ.2000, 3, 4ம் பரிசுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும்.

மாநில அளவில் குழு விளையாட்டுப்போட்டியில் முதலிடம் பெறும் வீரர் அல்லது வீராங்கனைகளுக்கு தலா ரூ.75ஆயிரம், 2ம் பரிசாக ரூ.50ஆயிரம், 3, 4 ம் பரிசாக ரூ.25ஆயிரம் வழங்கப்படும். தனிநபர் விளையாட்டுக்கு முதல்பரிசு ரூ.ஒரு லட்சம், 2ம் பரிசு ரூ.75ஆயிரம், 3ம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த விளையாட்டுகளுக்கான பெயர் பதிவை 'ஆன்லைன்' மூலமே செய்ய முடியும். பதிவு செய்த ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் தனித்தனியாக 'ஓ.டி.பி.' எண் வழங்கப்படும். அதன்மூலமே பங்கேற்க முடியும். கடந்தாண்டு தனிநபர் விளையாட்டுகளுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. குழு விளையாட்டுக்கு யாராவது ஒருவர் பதிவு செய்தால், மொத்தமுள்ள பிற போட்டியாளர்களை கணக்கிட்டு அந்த எண்ணிக்கையை குறிப்பிட்டால் ஒரு 'ஓ.டி.பி.' எண் தரப்பட்டது. மொத்தம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் தனிநபர், குழுப்போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்தாண்டு தனிநபர், குழு விளையாட்டுப் போட்டி இரண்டுக்குமே தனித்தனியாக பெயரை பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக கபடி, வாலிபால், கூடைப்பந்து, கிரிக்கெட், கோகோ போட்டியில் ஒரு அணிக்கு 12 பேர் தேவை எனில் அந்த 12 பேரும் தனித்தனியாக பெயரை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை சிக்கலால் பெரும்பாலான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குழுப் போட்டிகளில் பெயர்களை பதிவு செய்யவில்லை. குறிப்பாக கிராமப்புற பள்ளி மாணவர்கள் ஹாக்கி, கால்பந்து, ஹேண்ட்பால், கபடி உட்பட குழு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். தனித்தனியாக பெயர்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தால் 'ஆன்ட்ராய்டு' அலைபேசி இல்லாத திறமையான மாணவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய முடியவில்லை.

இந்த நடைமுறை சிக்கலால் ஆன்லைனில் மாணவர்களின் பதிவு கடந்தாண்டை விட பாதியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில் 'குழுப்போட்டிக்கு கேப்டன் என்ற முறையில் யாராவது ஒருவர் மட்டும் பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பரிசு பெற முடியும். இல்லாவிட்டால் பங்கேற்கும் அணிகள் குறைந்து தகுதியில்லாதவர்கள் மட்டுமே பங்கேற்று வெற்றி பெறுவர்' என்றனர்.






      Dinamalar
      Follow us