ADDED : ஆக 16, 2024 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி கழிவுநீர் வாய்க்கால் சிமென்ட் பாலம் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மெயின் ரோட்டில் உள்ள வாய்க்காலில் செல்கிறது. வெள்ளையம்மாள் கோயில் அருகே உள்ள இந்த சிமென்ட் பாலம் 3 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது.
இன்றுவரை பராமரிக்கப்படாததால் பாலத்தில் அடுத்தடுத்த 3 ஓட்டைகள் பெரிதாகி உள்ளன.இரவு நேரங்களில் தெரு விளக்கு இல்லாததால் டூவீலரில் செல்வோர், நடந்து செல்வோர் தடுமாறி விழுகின்றனர். மழை நேரங்களில் ஓட்டைகளில் குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி தெருக்களில் ஓடுகிறது. ஒன்றிய நிர்வாகம் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

