ADDED : மார் 06, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் அழகு 45.
நேற்று வழக்கம் போல் இவர் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். திருப்பரங்குன்றம் கருவேலம்பட்டி சிட்கோ அருகில் தண்டவாளத்தை 6:30 மணிக்கு ஆடுகள் கடக்க முயன்ற போது ஈரோட்டில் இருந்து செங்கோட்டை சென்ற ரயில் மோதியது. இதில் 4 ஆடுகள் பலியாகின. இதையடுத்து டிரைவர் ரயிலை நிறுத்தினார். மதுரை ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் இருந்த ஆடுகளின் உடல்களை அப்புறப்படுத்தினர். முப்பது நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.