/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுார் டோல்கேட் பிரச்னை அமைச்சர் முன்னிலையில் முடிவு
/
கப்பலுார் டோல்கேட் பிரச்னை அமைச்சர் முன்னிலையில் முடிவு
கப்பலுார் டோல்கேட் பிரச்னை அமைச்சர் முன்னிலையில் முடிவு
கப்பலுார் டோல்கேட் பிரச்னை அமைச்சர் முன்னிலையில் முடிவு
ADDED : ஜூலை 16, 2024 04:16 AM
மதுரை : ''கப்பலுார் டோல்கேட் பிரச்னையில் 'நகாய்' செயலாளரை சந்தித்து பேசும் வரை ஏற்கனவே உள்ள நிலை தொடர வேண்டும்'' என அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவானது.
டோல்கேட்டில் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. விதிமீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. கலெக்டர் சங்கீதா, எஸ்.பி., அரவிந்தன், நகாய் திட்ட அதிகாரி, திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள், கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நமது நிருபரிடம் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் ரகுநாதராஜா கூறியதாவது: ஒரு வாரத்தில் 'நகாய்' அமைப்பின் செயலாளர் சென்னைக்கு வர உள்ளார். அவர் மூலம் நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும். அதுவரை இதுநாள் வரை கட்டணமின்றி சென்று வந்த நிலையே தொடரும் என தெரிவித்துள்ளனர்.
அதற்கு உள்ளூர் வாகனங்களின் பட்டியலை ஆர்.டி.ஓ., மூலம் கலெக்டரிடம் வழங்கும்படி தெரிவித்துள்ளனர்.
பிரச்னை குறித்தும், சலுகை வழங்குவது குறித்தும் உயரதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். டோல்கேட்டில் 10 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ளவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும். இந்த டோல்கேட்டை நிரந்தரமாக அப்புறப்படுத்தும் வரை இந்நிலை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளோம் என்றார்.

